102 ஆண்டுகளாக பியானோ வாசிக்கும் பெண்!

Share

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் கேலாட் மாஸே.


107 வயதாகும் இந்த பெண் தனது 5 வயது முதல் பியானோ வாசிக்கிறார்.


பெற்றோரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி பியானோவை தனது காதலனாக இந்த வயதிலும் நேசிக்கிறார்.


இவருடைய 71 வயது மகன் தனது தாயின் பியானோ இசையை ரெக்கார்டிங் செய்ய விரும்பினார்.


ஆனால் அதை மாஸே விரும்பவில்லை. 90 வயதான நிலையில் தனது பியானோ வாசிப்பை பதிவுசெய்து என்னாகபேகிறது என்று கூறினார்.


என்றாலும் அவருடைய மகன் பிடிவாதமாக வேண்டிகேட்டுக்கொண்டார்.


“என்னை காட்டிலும் மிகபெரிய பியானோ கலைஞர்கள் உலகில் இருக்கிறார்கள். எனது வாசிப்பை பதிவுசெய்ய விரும்பவில்லை” என்றார்.


இறுதியில் மகனின் விருப்பத்திற்கு சம்மதித்தார். அதை தொடர்ந்து இதுவரை 6 ஆல்பங்கள் வெளிவந்திருக்கிறது.


முதல் உலகப்போரின் போது இவருக்கு 4 வயது 1918 ஆம் ஆண்டு ஜெர்மன் பீரங்கிகள் பாரிஸ் மீது குண்டு வீசியபோது தனது குடும்பத்தினருடன் பாதாள அறையில் ஒளிந்து வாழ்ந்ததை நினைவில் வைத்திருக்கிறார்.


1940 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜெர்மன் பிடியில் பிரான்ஸ் விழுந்தது. அந்த சமயத்தில் ஜெர்மானியர்களுக்கு பயந்து நகரை விட்டு தனது தோழியுடன் நூற்றுகணக்கான மைல்கள் சைக்கிளில் தப்பி சென்றதை மாஸே பரபரப்பாக தெரிவித்தார்.


கேலாட் மாஸே உலகப்புகழ் பெற்ற பியனோ கலைஞரான கார்லோட்டின் மாணவிகளில் உயிரோடு இருப்பவர் என்பதால்தான் அவருடைய பியனோ வாசிப்பு முக்கியதுவம் பெறுகிறது. கார்தேட்டின் வாசிக்கும் ஸ்டைலை அப்படியே அவருடைய மாணவியான மாஸே பிரதிபலிக்கிறார் என்று அவருடைய மகன் கூறுகிறார்.

Leave A Reply