கொரியா தமிழ்ச் சங்கத்தின் தமிழ் புத்தாண்டு விழா!

Share

சியோல், தென்கொரியா, கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021, திருவள்ளுவர் ஆண்டு 2052, தைத்திங்கள் 18-ம் நாள் ஞாயிறன்று (31 சனவரி 2021) இணையவழி இயங்கலையில் நடைபெற்றது. கொரியாவில் கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட்டு அது தற்பொழுது வெகுவாக  கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் நேரடி நிகழ்வு தவிர்க்கப்பட்டது.

நிகழ்விற்கு தென்கொரியாவிற்கான இந்தியத்தூதர் மாண்புமிகு ஸ்ரீப்ரியா ரெங்கநாதன், மதுரை தமிழ் சங்கத்தின் இயக்குனர் முனைவர் தா. லலிதா, முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, கவிப்பேரரசு வைரமுத்து, ஊடகவியலாளர் திரு நக்கீரன் கோபால், எழுத்தாளர் ஆதனூர் சோழன், மக்களிசை பாடகி மதுரை சின்னப்பொண்ணு, உலக தமிழ் வர்த்தக அமைப்பின் தலைவர் திரு செல்வகுமார் மற்றும் திரு பாட்சா, மேலாளர், இரசிய அறிவியல் மற்றும் பண்பாட்டு நிலையம் ஆகியோர் வாழ்த்து அனுப்பியிருந்தனர். சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி திரு. காரை செல்வராஜ் கலந்துகொண்டார்.

திரு கரை செல்வராஜ் சங்கத்தின் தகவல் தொடர்பு செயலாளர் பொறியாளர் பீட்டர் சகாய டார்சியூஸ் அவர்களின் “சிதறல்கள்” என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டு கவிஞரை பாராட்டினர்.

பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நிகழ்வன்று நிகழ்த்தப்படும் தலைவர் உரையை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் இராமசுந்தரம் நிகழ்த்தினார். கரோனா பெருந்தொற்று காலத்தில் சங்கம் மக்களுக்கு ஆற்றிய பணிகளை குறிப்பிட்டார். குறித்த காலத்தில் இங்குள்ள தூதரகம் ஆற்றிய பணிகளை நன்றிகூறி பாராட்டினார். மேலும் இங்குள்ள ஆசிய குழந்தைகளுக்கு நிலைத்திருக்கூடிய கட்டணம் குறைவான சர்வதேச ஆரம்பப் பள்ளியை அமைக்க குழு ஏற்படுத்தப்பட்டு பணிகள் நடைபெறும் என்றார். இறுதியாக ஈழதமிழர் துயர் துடைக்க உலகம் உதவிட வேண்டும் என கேட்டுகொண்டார். பாக் நீரிணையில் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை நிறுத்தக்கோரும் தமிழ்நாட்டு மக்களின் குரலை எமது சங்கமும் பொங்கல் திருநாள் – 2021 நிகழ்வில் எதிரொலிக்கிறது என்றார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவர் முனைவர் சு. இராமசுந்தரம், துணைத்தலைவர் ஜா. கிறிஸ்ட்டி கேத்தரின், செயலாளர் முனைவர் கு. இராமன், எதிர்கால ஆளுமைக்குழு தலைவர் முனைவர் செ. அரவிந்த ராஜா,  நிகழ்ச்சிகளுக்கான இணைச்செயலாளர் முனைவர். மோ. பத்மநாபன், தகவல் தொடர்பு செயலாளர் பொறியாளர் பீ. சகாய டார்சியூஸ், அமைப்பாளர்-கலை மற்றும் பண்பாடு திருமதி ப. சரண்யா, தொழில்நுட்ப அமைப்பளார் மு. ஆனந்த், கொள்கை மற்றும் வழிமுறைக்குழு தலைவர் முனைவர் அந்தோணி ஆனந்த், செயல்பட்டுக்குழு தலைவர் முனைவர் பு. பாஸ்கரன், பெண்கள் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ச. காயத்ரி, முனைவர் சத்யா மோகன்தாஸ், திரு ஹரிவேந்தன் ரகுபதி, உணவுத்துறை பொறுப்பாளர் திரு நீ. கோபாலகிருஷ்னன், உறுப்பினர்கள் திருமதி விசயலட்சுமி சுப்பையா, திருமதி விசயலட்சுமி  பத்மநாபன் முனைவர் சி. சோபா மற்றும் திருமதி ப. தீபலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்

Leave A Reply