நியூஸ் 7 தொலைக்காட்சியின் லட்சணமே இதுதானா?

Share

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள கர்ணன் திரைப்படம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஏராளமான விமர்சனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. படத்தை சிறப்பாக பாராட்டினாலும், அதில் உள்ள வரலாற்று பிழையை பெரும்பாலோர் சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஆதாரத்துடனான அப்படிப்பட்ட விமர்சனங்கள் அனைத்தும், படத்தில் குறிப்பிடப்படும் வன்முறை நிகழ்வு 1995 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் கொடியன்குளம் என்ற கிராமத்தில் நிகழ்ந்தது எனவும், படத்தில் 1997 ஆம் ஆண்டு நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தெளிவுபடுத்துகின்றன.

ஜெயலலிதா ஆட்சியில் நடந்த வன்முறை வெறியாட்டத்தை, கலைஞர் ஆட்சியில் நடந்ததாக காட்டுவது வரலாறை திரிப்பது ஆகும். சாதி பாகுபாடுகளை கிட்டத்தட்ட ஒழிக்கும் நிலைக்கு திமுக ஆட்சி வந்திருந்தது. ஆலயங்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நிலையை நோக்கி கலைஞர் சட்டங்களை இயற்றிக் கொண்டிருந்தார்.

ஆனால், திமுகவின் இந்த முயற்சிகளை முறியடிக்க பார்ப்பனர்களின் கைக்கூலியாக எம்ஜியார் செயல்பட்டார். அன்றைய இந்திரா அரசின் மிரட்டலுக்கு பயந்து திமுகவை பிளந்து, தனிக்கட்சி தொடங்கி, பார்ப்பனர்களின் ஆலோசனைப்படி இயங்கினார் எம்ஜியார்.

அவர்தான் முதன்முதலாக பார்ப்பனர்கள் சங்கம் தொடங்க அனுமதி கொடுத்தார். அதைத்தொடர்ந்து எல்லாச் சாதிகளும் தங்களுக்கென சங்கங்களை தொடங்கினார்கள். அதையே ஜெயலலிதாவும் வளர்த்தார். 1995 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை 1997ல் கலைஞர் ஆட்சியில் நடந்ததாக கர்ணன் படத்தில் காட்டியுள்ளனர். இது சரியல்ல. இது வரலாறை திரித்துவிடும் என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக நியூஸ் 7 தொலைக்காட்சியில் வேலை செய்யும் ஒருவர் ரொம்பவும் அறிவாளித்தனமாக ஒரு பதிவை இட்டிருந்தார். அதில் 1995ல் நடந்ததை 1997 என்று எப்படி காட்டலாம் என்கிறீர்களே, நீங்கள் வேண்டுமானால், 1997ல் நடந்ததை 1995ல் நடந்ததாக ஒரு திரைப்படம் எடுத்து பழிதீர்த்துக் கொள்ளுங்களே என்று கூறியிருந்தார்.

இந்தப் பதிவுக்கு பலரும் பலவிதமான கருத்துகளை பதிவிட்டிருந்தனர். அவருடைய பதிவு நியூஸ் 7 தொலைக்காட்சியில் பணிபுரியும் நல்ல அறிவுத்திறன் மிக்க நண்பர்களையும் இணைத்து கிண்டலுக்கு உள்ளாக்கியது. எனவே, இப்படிப்பட்ட முட்டாள்களை நிறுவனத்திலிருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் ஒரு பதிவை இட்டிருந்தேன்.

ஆனால், அந்தப் பதிவு முகநூல் விதிகளை மீறுவதாக கூறி, அந்தப் பதிவை மறைத்ததுடன், என்னையும் மூன்று நாட்களுக்கு விலக்கி வைத்திருக்கிறது. ஆனால், இதைக்காட்டிலும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களுடன் கூடிய பதிவுகளை சங்கிகள் பதிகிறார்கள். அதையெல்லாம் முகநூல் தானாக ஏன் பிளாக் செய்ய மறுக்கிறது?

Leave A Reply