மதுக்கடை பாதுகாப்பில் காவல்துறையை ஈடுபடுத்த முடியாது; மே 17 வரை மதுக்கடைகள் திறக்கப்படாது – பினராயி விஜயன்

Share

தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு மூன்றாம் கட்டத்தில் இந்தியா உள்ளது. சிவப்பும் மண்டலங்கள் அல்லாத பகுதிகளில் இயல்பு நிலைக்கு திரும்ப மத்திய அரசு சில தளர்வுகள் ஏற்படுத்தியது. அதில் மிக முக்கியமானது மதுபான கடைகளை திறக்க அளித்த உத்தரவு தான். மகாராஷ்ட்ரா, டெல்லி, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு அங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருப்பதை காண நேர்ந்தது.

இதனால் கொரோனா வைரஸ் தீவிரமாக மற்றும் மக்களுக்கும் வருவதற்கு வாய்ப்பினை இது தருகிறது என்ற அச்சம் அனைவருக்கும் எழுந்துள்ளது. இந்நிலையில் மே 7-ஆம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. சென்னையில் நோய்த்தொற்று மிகவும் அதிகமாக இருக்கின்ற காரணத்தால் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து இதர பகுதிகளில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் இயங்க உள்ளது.
கேரள அரசு மே 17ஆம் தேதி வரை மதுபான கடைகளை திறக்க தடை விதித்துள்ளது. வைரஸ் தீவிரமடைந்த காலத்தில் மதுபான கடைகளை திறக்க வேண்டும் என்றும், மருத்துவர்களின் அறிவுரைப்படி மது பிரியர்களுக்கு மதுபானம் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கேரள அரசு, கேரள உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தது.

ஆனால் தற்போது மத்திய அரசு மதுபான கடைகளைத் திறக்கலாம் என்று தளர்வு ஏற்படுத்திய போதும் மே 17ஆம் தேதி வரை எக்காரணம் கொண்டும் மது கடைகள் திறக்கப்பட மாட்டாது என பினராய் விஜயன் உறுதியாக அறிவித்துள்ளார். மேலும் மதுபான கடைகள் திறப்பது, அதற்கு பாதுகாப்பிற்காக காவல் துறையினரை பணியில் அமர்த்துவதற்கு விருப்பமில்லை என்று பினராய் விஜயன் உறுதிபட தெரிவித்துள்ளார். மற்ற மாநிலங்களைப் போன்றே கேரளாவும் பொருளாதார சீர் குழைவை சந்தித்துள்ளது. ஆனாலும் மே 17 வரை மதுக்கடைகள், சலூன்கள், பொதுபோக்குவரத்திற்கு தடை தொடரும் என்று பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இவரின் இந்த முடிவினை பொது மக்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.

Leave A Reply