புரெவி புயல்- தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு

Share

புரெவி புயல் காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதேபோல, கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களிலும கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த புயல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு மையத்திலிருந்து, 26 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 17 மீட்பு குழுக்களும், கேரளாவில் 8 குழுக்களும், பாண்டிச்சேரியில் ஒரு மீப்புக் குழுவும் தயார் நிலையில் உள்ளன.

சென்னையில் 2, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், மதுரையில் தலா 1 குழுவும் தயார் நிலையில் இருக்கின்றன. ராமநாதபுரம், நெல்லையில் 3 குழுக்களும், கன்னியாகுமரி, தூத்துக்குடியில் 2 குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.

கேரளா மாநிலம் இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழை, பத்தனம் திட்டா, கொல்லம், திருவனந்தபுரத்துக்கு மொத்தமாக 8 குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மீட்பு பணிக்கு எப்போது அழைத்தாலும் அனுப்புவதற்காக, மேலும் 26 குழுக்கள் தயாராக இருப்பதாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையின் சீனியர் கமான்டென்ட் ரேகா தெரிவித்துள்ளார்.

Leave A Reply