மீட்புப்பணிக்காக சுமித்ரா, ஐ.என்.எஸ். ஜோதி கப்பல்கள் வந்தடைந்தன

Share

தமிழகத்தில் 16 கிலோ மீட்டர் வேகத்தில் நிவர் புயல் நகர்ந்துவருகிறது. அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் காற்றின் வேகம் அதிகரித்துவருகிறது.

இதனையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மணிக்கு 40- 50 கிமீ வேகத்தில் கடல்காற்று வீசுகிறது.

நிவர் புயல் எதிரொலியால் அத்தியாவசியப் பணிகள் தவிர, அரசு அலுவலகங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து, புறநகர் ரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நிவர் புயல் மீட்பு பணியில் கடற்படைக்கு சொந்தமான சுமித்ரா, ஐ.என்.எஸ். ஜோதி கப்பல்கள் ஈடுபட உள்ளன.

முதற்கட்டமாக ஐ.என்.எஸ். ஜோதி தமிழகம் வந்துள்ளது/ 5 வெள்ள மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கிழக்கு கடற்படை தலைமையகம் அறிவித்துள்ளது.

Leave A Reply