மூன்றரை லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்?

Share

அரசு பணிகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதாகவும், பல்வேறு இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தாலும் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டியதுள்ளது என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமார், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையப் பயிற்சி மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அரசு பணிகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதாகவும், பல்வேறு இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தாலும் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டியதுள்ளது என்றார். இதற்கு நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வு மேற்கொண்டு வரும் இந்த குழுவுடன் முதற்கட்ட ஆலோசனையும் நடைபெற்று முடிந்துள்ளாகவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply