அலங்காநல்லூரில் உதயநிதி பிறந்தநாள் விழா!

Share

கழக இளைஞர் அணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அலங்காநல்லூர் கேட்டு கடையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனராஜ், அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கென்னடி என்ற கண்ணன், கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தன கருப்பு, தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது.

இதில் நகரச் செயலாளர் ராஜேந்திரன்,மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு துணை தலைவர் சங்கீதா மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் தண்டலை சரவணன், பேரூர் இளைஞரணி வெங்கடேசன், தகவல் தொழில்நுட்ப அணி தவசதீஸ்குமார், ஜெயராமன், ஒன்றிய கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் AV கார்த்திகேயன், மாணவரணி யோகேஷ், பிரதாப், மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply