ஐ.நா. நல்லெண்ண தூதராக சலூன் கடைக்காரர் மகள் தேர்வு!

Share

ஐ.நா.வின் ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக மதுரையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் மகள் நேத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் நேத்ராவுக்கு ரூபாய் 1 லட்சம் ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது. மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.

13 வயதான நேத்ரா தனது படிப்புக்காக சேமித்து வைத்திருந்த ரூபாய் 5 லட்சத்தை ஏழைகளுக்காக கொடுத்துள்ளதை ‘மான் கீ பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருந்த நிலையில் நிலையில், ஐ,நா தற்போது நேத்ராவை கவுரப்படுத்தியுள்ளது.

ஐ.நா. மாநாட்டில் பேச வாய்ப்பு கிடைத்தது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நேத்ரா, “உலகம் முழுவதும் வறுமையே இருக்கக் கூடாது என்பதே எனது ஆசை; இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன். சாதாரணமாக செய்த உதவிக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Leave A Reply