ஜிகா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை

Share

கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு தொடர் காய்ச்சல், உடலில் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கடந்த 7ஆம் தேதி அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில் அவரது ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஜிகா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை!

பரிசோதனையின் முடிவில் அந்த பெண்ணுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அதே அறிகுறிகளையுடைய 19 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 15 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பே இன்னும் குறையாத நிலையில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வைரஸ் கொசுக்களால் பரவும் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவின் அண்டை மாநிலமான தமிழகத்துக்கும் வந்து விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், மக்கள் ஜிகா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை சேர்ந்த கர்ப்பிணி மகப்பேறு மருத்துவமனையில் நன்றாக உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply