கனிமொழியிடம் உதயநிதி வாழ்த்துப்பெற்றார்!

Share

‘கவிஞர் கனிமொழி எம்.பி.க்கு திமுக தலைவர் ஸ்டாலின் மீது மன வருத்தம்.’

‘உதயநிதிக்கும் கனிமொழிக்கும் அதிகார யுத்தம்’ என பெய்ட் நியூஸ் ஊடகங்களில் தினந்தோறும் ஏதேனும் செய்திகளை உலவவிட்டபடி இருந்தார்கள்.

உதயநிதியின் பிறந்தநாளன்றும் இதே கலகச் செய்திகள் வெளிவந்தபடி இருந்தன. இன்று காலையில் உதயநிதி தன் தாய் தந்தையரிடம் வாழ்த்து பெற்றார்.

மாலை தனது பாட்டி ராசாத்தி அம்மையார் மற்றும் தனது அத்தை கனிமொழியிடம் சிஐடி காலனி வீட்டுக்கே சென்று வாழ்த்து பெற்றார்.

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் கட்சித் தலைமை மீது கொண்ட மனவருத்தத்தால் கனிமொழி கலந்து கொள்ளவில்லை என்று திமுகவுக்கு எதிராக மட்டுமே செய்திகளை வெளியிடும் எலெக்ட்ரானிக் ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் கதைகட்டி விட்டன.

உண்மையில் உரம் மற்றும் வேதியியல் குழு தலைவராக உள்ள கனிமொழி எம்.பி. அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகதான் கழக தலைவர் ஸ்டாலினிடம் அனுமதிபெறறுச் சென்றார்.

இந்நிலையில், இன்று மதியம் வரை உதயநிதி தனது தாத்தவின் அடையாளமாக கருதப்படும், கனிமொழியை சந்தித்து வாழ்த்து பெறவில்லை. இதையடுத்து கனிமொழி- உதயநிதி இருவருக்கும் அதிகார யுத்தம் என்ற முணுமுணுப்பு கிளம்பியது.

மாபெரும் இயக்கத்தின் இளைஞரணி செயலாளராக நியமனம் பெற்ற உதயநிதி இன்று முழுவதும் தொண்டர்களிடம் வாழ்த்து பெற்றுவிட்டு மாலை தனது தாத்தா கலைஞரின் சிஐடி காலனி இல்லம் சென்று தனது பாட்டி ராசாத்தி கருணாநிதி மற்றும் தனது அத்தை கனிமொழி எம்பி ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.

இதையடுத்து, ஏதேனும் தீனி கிடைக்காதா என்று காத்திருந்த மீடியாக்களின் கழகத்தில் கலகம் விளைவிக்கும் திட்டம் பணால் ஆகிவிட்டது.

Leave A Reply