மகளிர் வாக்குகளை பெற திமுக என்ன திட்டம் வைத்திருக்கிறது?

Share

தேர்தல் களத்தில் நிற்கும் தலைவர்கள் தங்களஅ ஆளுமையை வெளிப்படுத்துவதில்தான் 2021 தேர்தல் களம் அமைந்துள்ளது.

தற்போதைய கருத்துக்கணிப்புகள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சாதகமாக  உள்ளது. இந்த கருத்து கணிப்புகள் தி.மு.க.விற்கு சாதகமாக உள்ளது போல் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வந்த கருத்துக்கணிப்புகள் திமுக- விற்கு சாதகமாக வந்தது. அந்த கருத்துக்கணிப்பை நம்பிய ஸ்டாலின் திமுக வெற்றி உறுதி என நம்பியதன் விளைவுதான் தேமுதிகவை கழற்றிவிட்டது.

ஆனால் அன்று ஸ்டாலினை திசைதிருப்பியது கருத்துகணிப்பு என்பதை விட கருத்து திணிப்பு தான். ஜெயலலிதா எதிர் முகாமில் இருப்பவரின் பலம்- பலவீனம் இரண்டும் அறிந்து அதற்கேற்றார் போல வியூகம் அமைப்பார்.

கலைஞர் அரசியலில் தன் பலத்தை மட்டுமே பிரயோகிப்பார்.அதுமட்டுமின்றி அவர் அரசியல் பயின்றது பெரியார்- அண்ணா எனும் மாபெரும் தலைவர்களிடத்தில்.

கலைஞர் தலைவர் பதவிக்கு பல இன்னல்கள் சோதனைகளை கடந்து தான் வந்தார். தற்போது ஜெயலலிதா பாணியில் பா.ஜ.க.ஊடகங்கள் மூலம் திமுக தான் வெற்றி பெறும் என்ற பிம்பத்தை உருவாக்கி ஸ்டாலினை நம்ப வைக்க முற்படுகிறது.

ஜெயலலிதா 2014 லில் பா.ஜ.க.வை எதிர்த்து நாடாளுமன்றத்தேர்தலில் முன் வைத்த கோஷம் மோடியா, இந்த லேடியா! என்பது.

இதை எதிர் அரசியலளர்கள் எதுகை,மோனையாக தான் பார்த்தனரே தவிர அதில் ஜெயலலிதா கையாண்ட சூட்சமத்தை புரிந்து கொள்ள வில்லை.

லேடியா என்ற வார்த்தை ஒருமையில் இல்லாமல் பன்மையில் எதிரொலித்தது அதன் விளைவு தமிழகத்து லேடிகள் எல்லாம் ஜெயலலிதா என்ற லேடிக்கு பெருவாரியாக ஆதரவு தந்ததன் விளைவு அதிமுக முழுவெற்றி பெற்றது.

இந்த சூட்சமத்தை தேர்தலுக்கு பின் உணர்ந்த திமுக தனது கட்சியில் உள்ள மகளிர் அமைப்புக்கு 8 வருட காலம் டெல்லி அரசியலில் பிரகாசித்து வந்த கனிமொழியை 2015 ல் மகளிர் அணிச் செயலாளராக நியமித்தது.

அதன் விளைவு 2016 ல் அதிமுகவின் பெருமளவு மகளிர் ஆதரவை கனிமொழியை வைத்து குறைத்தார் கலைஞர். அதுமட்டுமின்றி ஸ்டாலினை வைத்து நமக்கு நாமே பயணத்தை தொடங்கி மக்களின் ஆதரவை பெற்று 89 தொகுதிகளை வென்றார்.

கலைஞர் கணக்கில் தப்பியது தேமுதிக கூட்டணி கைநழுவி போனது தான்.அதன் விளைவு 1 சதவீத வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு பறிபோனது. தற்போது கூட ஒரு நல்ல வாய்ப்பை திமுக தவறவிட்டுள்ளது என்றே தோன்றுகிறது.

பா.ஜ.க.வேல் யாத்திரை எனும் பெயரில் பல நகரங்களில் கூட்டம் சேர்த்து பாஜக தமிழகத்தில் வளர்ச்சி கண்டது போன்ற ஒரு மாயபிம்மத்தை உருவாக்குகிறது.

வேல் யாத்திரைக்கு போட்டியாக தமிழின இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்புகளை உருவாக்காத மத்திய- மாநில அரசுகளை கண்டித்து வேலை கேட்டு குமரியில் இருந்து கோட்டையை நோக்கி திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொண்டு இருந்தால் மக்களிடம் திமுக நடைபயணம் பேசப்பட்டிருக்கும்.பா.ஜ.க யாத்திரை பேசப்பட்டிருக்காது.

பீகார் முடிவுகளை கண்டு தமிழக அரசியல் வியூகங்களை மாற்றும் கட்சிகள் மகளிர் வாக்குகளை கவர முயல்கின்றனர். அதிமுகவில் மகளிர் ஆதரவு பெற்ற தலைவர் இல்லை. இதை சரிசெய்யவே எடப்பாடி தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி பெண் தனக்கு வேலை கேட்டு மனு அளித்த இரண்டு மணிநேரத்தில் வேலை வழங்கினார் என்ற செய்தி பரவலாக பேசப்படுகிறது.

ஆந்திராவில் தமிழக மாணவர்கள் புத்தகங்கள் இல்லாமல் தவிக்கின்றனர் என எடப்பாடியிடம் கோரிக்கை வைத்தவுடன் 10,000 புத்தகங்கள் வழங்குகிறார்.

இதன் மூலம் பெண்கள் வைக்கும் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார். திமுக மகளிர் வாக்குகளை கவர எந்தமாதிரியான திட்டங்களை முன்னெடுக்க போகிறது என்பது விடை தெரியாத வினாவாக உள்ளது.

Leave A Reply