தமிழகம் வட மாநிலத்தவரின் வேட்டைக்காடாக வேண்டுமா? ஒரே ஒரு உதாரணம்!

Share

கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் எவ்வளவோ கேட்டும் பிரதமர் மோடி கொடுக்காமல் அதானிக்கு விற்ற திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் கட்டணத்தை அதிகரித்துள்ளனர்..

அதிகமாக அல்ல..!

முப்பது நிமிடத்திற்கு பிறகு ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஏழு ரூபாய் அதிகரித்துக் கொண்டிருக்கும்..

உதாரணமாக மூன்று மணி நேரம் விமானம் வர தாமதித்தால் 1237 ரூபாய் மட்டுமே….

அரசாங்க சொத்தை விற்றதன் விளைவு…

எந்த முகத்துடன் இவர்கள் வாக்கு கேட்கிறார்கள்..

எனத்தெரியவில்லை..!

மேலே சொன்னது அனைத்தும் உண்மை…

*மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி தமிழகத்தில் வென்றால் தமிழகம் வட மாநில வேட்டைக்காடாக மாற்றப்படும்.

*டிஎன்பிஎஸ்ஸி (TNPSC) கலைக்கப்படும்.

*அனைத்துப் பல்கலைக் கழகங்களும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்படும்.

*சமூக நீதி கொள்கையின் மணி மகுடமான 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.

*அனைத்துத் துறைகளிலும் அரிய வகை உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

*தமிழகத்தின் நீர் வளங்கள் அனைத்தும் மத்திய அரசின் நிர்வாகத்திற்கும் செல்லும்.

*தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயமாக்கப்படும்.

*மின் கட்டணம் மூன்று மடங்கு உயரும்.

*தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படும்.

*ஆரம்பக் கல்வியிலிருந்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கு செல்வதற்கான உயர்கல்வி வரை அனைத்து இடங்களிலும் நீட் தேர்வு புகுத்தப்படும்.

*தமிழக காவல்துறையில் முழுக்க முழுக்க வட மாநில அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

*தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளும் தனியார் மயமாக்கப்பட்டு அதானி வசம் ஒப்படைக்கப்படும்.
*மீனவர்களின் மீன்பிடி உரிமையை தனியார் வசம் செல்லும்.

*சேலம் டூ சென்னை எட்டு வழி சாலை விவசாயிகளிடம் இருந்து பலவந்தமாக நிலங்களை பிடுங்கி உடனடியாக அமல் படுத்தப்படும்.

*சிறு குறு தொழில்கள் அனைத்தும் நசுக்கப்பட்டு சுயதொழில் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு அனைவரையும் குலத்தொழில் நோக்கி செல்லும் வகையில் திட்டங்கள் அமல்படுத்தப்படும்.

*அமைதிப் பூங்காவான தமிழகம் சாதி மத கலவரங்கள் தூண்டப்பட்டு கலவர பூமியாக மாறும்.

* சிந்தித்து செயல்படுவோம்.

*பாஜக என்னும் நச்சுப் பாம்பு அதிமுக அசந்த நேரத்தில் அவர்களை மிரட்டி அவர்களின் தோளில் ஏறி விசத்தை கக்க வருகிறது. விசத்தை முறிப்பதோடு நச்சுப் பாம்பை அடியோடு இத்தேர்தலில் தீ வைத்து கொளுத்த வேண்டும்.

Arul Kanchee

Leave A Reply