தமிழ்நாடு போக்குவரத்துதுறையின் பொற்காலம்! – உதயமுகம் வார இதழின் கவர் ஸ்டோரி

Share

2004 ஆம் ஆண்டுக்கு முன் இந்திய ரயில் கள் நாற்றமெடுத்தவையாக இருந்தது. உலகின் மிகப்பெரிய ரயில்வே என்ற அந்தஸ்த்தை பெற்றிருந் தாலும், ஒவ்வொரு ரயில்வே பட்ஜெட்டிலும் பயணிகள் ரயில், சரக்கு ரயில் ஆகியவற்றின் கட்டணம் உயர்வதே வாடிக்கையாக இருந்தது.

2004ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச் சராக நியமிக்கப்பட்டார் லாலுபிரசாத் யாதவ். காலந்தோறும் நஷ்டத்திலேயே இயங்கிய ரயில்வே துறையில் லாலு என்ன செய்யப்போகிறார் என்றே பலரும் நினைத்தார்கள்.

ரயிலில் வசதிகளை கூட்டாமல், தொழில்நுடபங்களை நவீனப்படுத்தாமல் ஏனோதானோவென்று ஓடிக்கொண்டிருந்தது இந்திய ரயில்வே.

லாலு பொறுப்பேற்றதும், ரயில் கட்டணங்கள் இனி உயராது. அதேசமயம், ரயில்வேயின் சொத்துக் களை முறைப்படுத்தி, அதன்மூலம் வருவாயை அதிகரித்து லாபத்தில் இயக்குவேன் என்று அறிவித்தார் லாலு.

அவருக்கு முன்னாள் ரயில்நிலையங்கள் குப்பையாக இருக்கும். பழமைவாய்ந்த நடைமுறைகள் அமலில் இருந்தன. லாலு இந்திய ரயில் நிலையங்களை தூய்மைப்படுத்தினார். ரயில்வே சொத்துக்களை கண்டறிந்து கையகப்படுத்தினார். அவற்றை வருவாய் தரும் வகையில் பயன்படுத்தினார். அவர் அமைச்சராக இருக்கும்வரை ஒரு பைசா கூட ரயில் கட்டணம் உயரவில்லை. அதேசமயம், ரயில்வேயின் வரலாற்றில் முதன்முறையாக லாபம் காட்டப்பட்டது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அமைச்சரவையில் பலருக்கும் பிடித்தவராக போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு சிவசங்கர் சா.சி. இருக்கிறார்.

திறம்பட இயங்கும் அமைச்சர்கள் என்று ஒரு பட்டியல் தயாரித்தால், அதில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் சா.சி. ஆகியோர் மு.க.ஸ்டாலினுக்கு பெருமை சேர்ப்பவர்களில் முக்கியமானவர்கள்.

மாநிலத்தின் தொழில்வளர்ச்சியை முந்தைய அதிமுக அரசு சீரழித்து வைத்திருந்தது. இங்கே இருந்தவர்களும், வர இருந்தவர்களும் வேறு மாநிலங்களைத் தேடி ஓடினார்கள்.

போக்குவரத்துத்துறையோ நலிந்து கிடந்தது. கடமுடா வண்டிகளின் பயணக் கட்டணத்தை யும்கூட மூச்சுமுட்ட ஏற்றிச் சென்றது அதிமுக அரசு.

அந்த வகையில், இந்த இரண்டு துறைகளையும் தனக்கு மிக நம்பிக்கையான இருவரிடம் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.
தொழில் முதலீடுகளையு ஈர்ப்பதிலும், தமிழர்களின் தொன்மையை தோண்டி எடுத்து நிரூபிக்கும் முயற்சியிலும் தங்கம் தென்னரசு சிறப்பாக செயல்படுகிறது.

அதேசமயம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக கொஞ்சகாலம் பொறுப்பு வகித்தாலும், சமூகநீதி தொடர்பான பல நடவடிக்கைகளையும், துறையின் சார்பில் இயங்கும் விடுதிகளில் நூலகங்கள் அமைக்கும் திட்டத்தை அறிவித்திருந்தார் சிவசங்கர்.

அதைத்தொடர்ந்து, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவுடன் அவருடைய முன்னெடுப்புகள் வியக்க வைக்கின்றன.

லாப நோக்கம் மட்டுமே நோக்கமாக கொண்டு போக்குவரத்துத் துறையை இயக்கமுடியாது என்று வெளிப்படையாகவே அறிவித்தார். தலைவர் கலைஞர் எந்த நோக்கத்துக்காக பேருந்துகளை அரசுடைமை ஆக்கினாரோ, அதை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது அந்த அறிவிப்பு.

போக்குவரத்துத் துறைக்கு சொந்தமான இடங்களை வணிகமயமாக்கும் திட்டத்தையும், கடமுடா பேருந்துகளின் சேஸ்களில் தகுதியானவற்றை தேர்வு செய்து அவற்றில் புதிய பாடி கட்டுவது போன்ற யோசனைகளை அவர் முன்மொழிந்தார். பொறியாளராகவும், எம்பிஏ பட்டதாரியாகவும் இருப்பதால் ஆழமாக சிந்தித்து அதிகாரிகளை வழிநடத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார்.

பேருந்துகளில் நவீன வசதிகளை அமல்படுத்துவது, பெண்களுக்கு உரிய வாயப்புகளை உருவாக்கி அறிவிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தினார்.

பொறுப்பேற்ற சில நாட்களிலேயே தனக்கு கொடுக்கப்பட்ட துறையில் என்னென்ன செய்ய வேண்டும் என்ற செயல்திறன் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

போக்குவரத்து துறையில் இதுவரை நிலவிய லஞ்சம் ஊழலை தவிர்க்க அவர் பல அதிரடி மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறார். இதன்மூலம், இடைத்தரகர்களும் அதிகாரிகளும் பங்கு பிரித்த அரசு வருவாய் முழுமையாக அரசுக்கே கிடைக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான எல்எல்ஆர் என்ற பழகுனர் உரிமம் ªறுவதற்கு ஆர்டிஓ அலுவலக வாசல்களில் ஒரு நாள் முழுவதும் தவம் கிடக்க வேண்டும்.

அதற்கான புரோக்கர்கள் கண்ணசைவு காட்டினால் தான் அந்த உரிமம் பெறமுடியும். இதற்காக கப்பம் கட்டினால்தான் வேலை விரைவாக முடியும்.

அதுபோல வாகனங்களுக்கான முகவரி மாற்றம் உள்ளிட்ட ஆர்டிஓ ஆபீஸ் நடைமுறைகளுக்கும் இதுவரை பணம் செலவழித்தால்தான் காரியமாகும் என்ற நிலை இருந்தது. ஆனால் இனி எல்எல்ஆர் மற்றும் முகவரி மாற்றம் போன்ற ஆர்டிஓ ஆபீஸ் வேலைகளுக்கு அலுவலகம் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆன்லைனிலேயே இந்தப் பணிகளை முடித்துக்கொண்டு அதற்கான சான்றிதழ்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார்.

வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக அவர்களை ஆர்டிஓ அலுவலக வாசல்களில் நிறுத்தி அவர்களுடன் தாங்களும் காத்துக் கிடந்த காலம் மலையேறிவிட்டது. ஆன்லைன் மூலம் அவர்கள் தொல்லை நீங்கியிருக்கிறது.

மொத்தத்தில் இந்திய ரயில்வேயை லாபகரமாக இயக்கிய லாலுவின் அதே நிர்வாக உத்திகளை தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் வெற்றிகரமாக செயல்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஆம் இதுவரை பொறுப்புவகித்த அமைச்சர் களிலேயே இவருடைய அணுகமுறை வேறுபட் டிருக்கிறது. போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆன டீசலை மொத்தமாக கொள்முதல் செய்யும் தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒரு லிட்டருக்கு 20 ரூபாயை உயர்த்தியது. அதாவது வெளிமார்க்கெட்டில் 102 ரூபாய் உள்ள டீசலுக்கு மத்திய அரசு 122 ரூபாய் நிர்ணயம் செய்தது.

இதனால் தமிழக போக்குவரத்துக் கழக பேருந்துகள் தங்களுக்கான டீசலை வெளியில் உள்ள பங்குகளில் நிரப்பி வருகின்றன. கடந்த காலங்களில் மொத்தமாக கொள்முதல் செய்வதால் சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்கள் தங்களுக்கு கிடைக்கும் இன்சென்டிவ் ஒரு லிட்டருக்கு 75 பைசாவை அமைச்சருக்கு என வழங்குவார்கள். இதை போக்குவரத்து துறை அதிகாரிகள் வசூலித்து அவரிடம் வழங்குவது வழக்கம்.

ஆனால் இதை அறிந்த அமைச்சர் சிவசங்கர் உடனடியாக களத்தில் இறங்கினார். இந்த 75 பைசாவை அரசுக்கே வழங்கும் வகையில் ஒரு குறிப்பாணையை அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் அனுப்பினார்.

“வெளிமார்க்கெட்டில் டீசல் எந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதோ அதில் இருந்து 75 பைசா குறைவாகத்தான் கொள்முதல் செய்ய வேண்டும்Ó என்று அதிரடியாக அறிவித்தார்.

அதுமட்டுமல்ல சட்டப் பேரவையில் தனது மானிய கோரிக்கையைத் தாக்கல் செய்யும் போது எதிர்க்கட்சி உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்தி இந்த டீசல் கொள்முதல் பற்றி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மிகத் தெளிவாகவே பதிலளித்தார்.

மத்திய அரசு ஒரு லிட்டருக்கு மார்க்கெட் விலையை விட 20 ரூபாய் உயர்த்திய நிலையில் தனியாரிடம் கொள்முதல் செய்யும் டீசல் மார்க்கெட் விலையைவிட 75 பைசா குறைவாகத்தான் கொள்முதல் செய்கிறோம். இதை உறுப்பினர் எங்கு வேண்டுமானாலும் ஆய்வு செய்து கொள்ளலாம் என்றபோது அவையே அமைதியாகியது.

சத்தமே இல்லாமல் பல கோடிகளை சம்பாதித்த அமைச்சர்கள் மத்தியில் இவர் வித்தியாசமானவராக இருக்கிறார். எல்லாம் குடும்ப பாரம்பரியம். இவருடைய தந்தை சிவசுப்ரமணியம் திராவிட இயக்கத்தின் கொள்கையில் ஊறியவர். அவருடைய பிள்ளை எப்படி இருக்கும்?

தந்தை பெரியாருடன் நெருக்கமாக வளர்ந்தது இவருடைய குடும்பம். இவருடைய தந்தை எத்தனையோ முறை தனது வாய்ப்புகளை பறிகொடுத்திருக்கிறார். ஆனாலும், தலைவர் கலைஞருக்கு நெருக்கமாக இருந்தார். கட்சிக்கு நெருக்கடியான சமயத்தில் எல்லாம் தலைமையுடன் நின்றிருக்கிறார். அவர் இழந்த வாய்ப்புகளை அவருடைய மகனுக்கு கலைஞரின் மகனாக முதல்வர் ஸ்டாலின் வழங்கியிருக்கிறார்.

தமிழ்நாடு அமைச்சரவையிலேயே சமூக வலைத்தளங்களில் அதிகம் கொண்டாடப்படும் அமைச்சராக இவர் இருக்கிறார். மக்கள் மனதை வெளிப்படுத்தும் சிந்தனைகளை உள்வாங்கிக் கொள்வதே இதற்கு காரணம்.

அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு கட்டணத்தில் சலுகை. ஒரு பேருந்து எங்கு வருகிறது என்பதை தொலைபேசியிலேயே அறிந்து கொள்ளும் வசதி. போக்குவரத்தின் போது பெண்களுக்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டால், அதை உடனுக்குடன் தலைமையகத்துக்கு தெரிவிக்கும் வகையில் அபாயச் சங்கிலி போன்ற அபாயப் பொத்தான் போன்ற பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

அரசுப் பேருந்துகளில் சரக்குகள் கொண்டு செல்லும் வசதி மற்றும் அரசு பேருந்துகளில் விளம்பரங்கள் மூலம் வருவாயை உயர்த்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் துறையை லாபத்தில் இயக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. •

-ஆதனூர் சோழன்

Leave A Reply