காவல்துறை அமைச்சருக்கு கட்சிக்காரனின் கதறல் கேட்குமா?

Share

இது ஒரு கட்சிக்காரனின் கதறல்… அப்படியே தருகிறோம்…

2022சனவரி 10 ந்தேதி ஒரு சாலை விபத்து.

நான் சென்ற ஸ்கூட்டர் மீது என்பீல்டு வண்டியில் அதி வேகமாக வந்த ஒருவர் மோதி விட்டார்.

நான் என் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயிலாடுதுறை தனியார் சிறப்பு எலும்பு முறிவு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு அங்கு சிகிச்சை மேற்கொண்டு செய்ய முடியாத சூழ்நிலையில் உடல்நிலை இருந்தால் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 30 நாட்கள் உள் நோயாளியாக இருந்து 3 அறுவை சி‌கி‌ச்சை நடைப் பெ‌ற்று உயிர் பிழைத்துள்ளேன்.

இன்றும்கூட படுத்த படுக்கையாக இருக்கிறேன்.

காவல்துறை என்னிடம் எந்த விதமான விசாரணையும் மேற்கொள்ளமல் என் மீது வழக்கு பதிவு செய்து என்னை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இரண்டு மாதமாக அரசுக்கு மனு மேல் மனு கொடுத்தும் எந்தவித விசாரணையும் இல்லை.

தனிப்பிரிவு மற்றும் தலைவருக்கு தனியாக புகார் மனு ஒன்றையும் அளித்து உள்ளேன். இதற்கு மேல் என்ன செய்ய முடியும்.

எனக்கு நடந்த அநீதிக்கு நீதி மன்றம் செல்ல இருக்கிறேன்.

தமிழ் நாடு காவல்துறை வாழ்க.

ச.அன்பழகன்
சீர்காழி..

Leave A Reply