மனிதகுல வரலாறு – ரோம் அரசு தோற்றம்

Share

ரோமபுரியின் குடியரசு பாட்ரிசியர்களால் கட்டுப்படுத் தப்பட்டது. இவர்கள்தான் செனட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த செனட் 300 உறுப்பினர்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த செனட் சபைதான் சட்டங்களை இயற்றியது. போர் தொடுக்க வேண்டுமென்றால் இது தான் அனுமதி அளித்தது.

கட்டிடங்கள் கட்டவும், வரிகள் விதிக்கவும், பொதுமக்களுக்கான இதர கொள்கைகளை முடிவு செய்யவும் இந்த செனட் சபைதான் அதிகாரம் மிக்க தாக இருந்தது.

இந்த ‘செனட்’ சபை தவிர, ஒன்றியம், கவுன்சில் என்று அழைக்கப்பட்ட அலுவலகத்திற்கு 2 தலைவர்களையும் ரோமானியர்கள் நியமித்திருந்தனர்.

ஒரு வருட காலத்திற்கு பணியில் அமர்த்தப்படும் இந்த தலைவர்கள், அரசின் ஒரு அங்கமாக செயல்பட்டனர். அரசு அலுவலர்களின் பணிகளை மேற்பார்வை செய்வது, வரிவசூல், நீதிபரிபாலனம் போன்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.

ஒன்றியங்கள் ஒன்றி ணைந்து செயல்படும்போது அதிகார வரம்பும் அதிகரித்தது. எனினும், இவர்களால் சுயமாக தன்னிச்சையாக எதையும் செயல்படுத்த இயலவில்லை. இவர்கள் ஆலோசனைகளை வழங்கவும், அரசு நல்ல முறையில் இயங்க ஒத்துழைப்பு வழங் கவுமே பயன்படுத்தப்பட்டனர்.

யுத்தம் நடைபெறும் அவசர காலங்களில், ரோமா னியர்கள் ஒரு சர்வாதிகாரியைத் தேர்வு செய்தனர். அவருக்கு வானளாவிய அதிகாரத்தை வழங்கினர். அவரது வார்த்தைகளையே வேத மாக பின்பற்றினர். எனினும், இத்தகைய சர்வா திகாரியை நெருக்கடி நிலை தீரும்வரை மட்டுமே பின்பற்று வார்கள்.

பிறகு பழையபடி ‘செனட்’ மற்றும் தேர்ந்தெடுக் கப்பட்ட ஒன்றியங்களுக்கே அதிகாரம் வழங்கப்படும். இவ்வா றாக 500 வருடங்கள் நீடித்த இந்த குடியரசு காலத்தில், ரோமா புரி சுதந்திரம் மற்றும் செல்வச் செழிப்பில் மேம்பட்ட நிலை யை அடைந்தது.

Leave A Reply