இளம் வயதில் 100 நாடுகள் சென்று கின்னஸ் சாதனை! – ஆதனூர் சோழன்

Share

ஜேம்ஸ் அஸ்கொய்த்துக்கு நாடுகளுக்கு செல்வதே பொழுபோக்கு. நிஜத்தில் இவருக்கு ஒரு வீடு வாங்குவதே கனவாக இருந்தது.

அதற்காகவே அவர் சம்பாதிக்க நினைத்தார். 12 வயதில் இவர் கார்களை கழுவும் வேலையை செய்தார். 5 பவுண் கூலி கிடைத்தது. ஒரு மாதத்தில் கிடைத்த 120 பவுண் கூலியை அம்மாவிடம் கொடுத்தார்.

அவர், ஜேம்ஸ் பெயரில் ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்கினார். அதன்பிறகு கிடைத்த வேலையை எல்லாம் செய்தார். வங்கியில் இவருடைய இருப்பு அதிகரித்தது.

பிறகு படிக்கச் சென்றார். அந்தச் சமயத்தில் சக மாணவர்களுடன் கிழக்காசிய பயணத்தை மேற்கொண்டார். அப்போது வீடுகளை கட்டும் பணியில் ஈடுபட்டனர்.

திரும்பவும் கல்லூரிக்கு வந்தபோது படிக்க மனமில்லை. வீடு வாங்கவேண்டும் என்று நினைத்தார். ஷேர் மார்க்கெட்டில் பணம் போட்டார். அது முதலில் லாபம் கொடுத்தது. பிறகு நிறைய இழப்பு ஏற்பட்டது.

இந்தச் சமயத்தில்தான் நாடுகளுக்கு பயணம் போவது என்று முடிவெடுத்தார். 24 வயதுக்குள் 100 நாடுகளுக்கு பயணம் செய்தார். ஆனால், இந்த பயணம் அவருடைய தொழில் சார்ந்ததாக இருந்தது ஹாலிடே ஸ்வாப் என்ற பிசினஸை தொடங்கினார் எந்த ஒரு நாட்டுக்கு போவதென்றாலும் அந்த நாட்டில் பெஸ்ட் எது என்று இவருடைய இணையதளம் தேர்வு செய்து கொடுக்கிறது.

இதுவரை இவர் சென்ற நாடுகளில் ஏமன் இவரை பெரிதும் பாதித்தது. அங்கு ஒரு தாய், தனது பிள்ளைகளில் யாருக்கு என்று உணவளிக்க வேண்டும் என்று திட்டமிடும் நிலை இருந்ததாக கூறுகிறார். அங்கு உணவின்றித் தவிப்போருக்கு உணவு வழங்கும் பணியை செய்ததாக கூறுகிறார்.

ஏமன் நாட்டில் தூதரகம் இல்லை. மீடியாக்கள் இல்லை என்கிறார்.

சூடான் நாட்டுக்குள் நுழையவே 1500 பவுண் தேவைப்பட்டதாகவும் அவ்வளவு பணம் தன்னிடம் இல்லையென்றும் கூறுகிறார் ஜேம்ஸ்.

Leave A Reply