ஜனவரி மாதத்தில் 1991ல் #திமுக ஆட்சியை ஜெயலலிதாவும் அன்றைய சந்திரசேகர அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் முக்கிய அமைச்சராக இருந்த சுப்பிரமணியசாமியும் கூட்டாக சேர்ந்து இந்த சம்பவத்தை முக்கிய காரணியாக வைத்து சரிந்தது லா அண்ட் ஆடர் எனக்கு கூறித்தான் கலைத்தார்கள்..
திமுக ஆட்சி கலக்கப்பட்ட நாலே மாதத்தில் தான் ராஜீவ் காந்தி படுகொலை நடந்தது..
அப்போதும் சுப்பிரமணியசாமிதான் காபந்து சர்க்காரில் முக்கிய மத்திய அமைச்சர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..
கொல்லம் வேலுப்பிள்ளை மகன் தமிழ் ஈழ போராளிகளை கொன்று குவித்ததை,
மேலும் இது நடந்து 45 நாட்களில் இலங்கையில் 4 ஆகஸ்ட் 1990ல் மசூதியில் அமைதியான முறையில் தொழுது கொண்டிருந்த சிறுவர்கள் உட்பட..
எதையும் கருத்தில் கொள்ளாமல் 147 பேர்களை மனசாட்சி இல்லாமல் கொன்ற பிரபாகரன் தலைமையிலான விடுதலை புலிகள் அமைப்பின் துணிகரத்தை, ஆர்எஸ்எஸ் அஜண்டாவின் செயல்திட்டத்தை ரசித்த சுப்பிரமணியசாமி..
ஏன் இவர்களை கூலிப்படையாக ஆக்கி இருக்கக் கூடாது என்பதை..
அவருடன் பயணித்த திருச்சி வேலுசாமி சொல்லிய ஜெயின் கமிஷன் சாட்சியங்கள் மூலம் உள்ள குற்றத்தில்..
இன்னும் விடுவிக்க முடியாத குற்றவாளிதான் சுப்பிரமணியசாமி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..
பின்வரும் ஒரு வருடத்தில் மூன்று முக்கிய டைம்லைனை கூர்ந்து கவனிக்க வேண்டுகிறேன்..
🐝ஜூன் 1990 – 15 சகோதர ஈழப் போராளிகளை படுகொலை படுகொலை
🐝ஆகஸ்ட் 1990 – இலங்கையில் மசூதியில் அமைதியாக தொழுது கொண்டு இருந்தவர்கள் 147 பேர் படுகொலை..
🐝மே 1991 – ராஜீவ் காந்தியுடன் மேலும் 30 பேர் படுகொலை..
இப்படி ஒரு வருடத்துக்குள் எத்தனை படுகொலைகள் ஈவிரக்கமில்லாமல் நிகழ்த்தப்பட்டுள்ளது..
கொல்லம் வேலுப்பிள்ளை மகன் அகில இந்திய தலைவர் ராஜீவ் காந்திக்கு மற்றும் அவரின் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல..
இதன் மூலம் தீராத அவமானத்தை தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல ..
மாறாக இலங்கையிலுள்ள தன் சக போராளிக் குழுக்களுக்கும் இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்களுக்கும் எவ்வளவு பெரிய துரோகத்தை செய்துள்ளதை யாவரும் காணலாம்..
தற்போது எழுவர் விடுதலை சுப்பிரமணியசாமி தொடர்ந்து எதிர்ப்பதன் காரணம்..
எங்கே எழுவர் வெளிவந்து பேசத் தொடங்கி விட்டால்..
இவரும் இவருடன் சேர்ந்து பிரபாகரன் நடத்திய சதித் திட்டமும் வெளிவந்து விடும் என்ற பயத்தின் காரணமாகவும் இருக்கலாம்..
மேதகு தேசிய தலைவர் என்ற அடைமொழி களுக்கு மிகவும் பொருத்தமானவரகள் ஈழப் போராளிகள் பத்மநாபா சபாரத்தினம் உள்ளிட்டவர்கள் மட்டுமே..
கொல்லம் வேலுப்பிள்ளை மகன் பிரபாகரனை மாவீரன் என்று சொல்வதே வேடிக்கை..
தன்னை நம்பாமல் தன் கருத்தியலை நம்பாமல் தனது துப்பாக்கி குண்டுகளை மட்டுமே நம்பிய அவன் எப்படி ஒரு வீரனாக இருக்க முடியும் அவன் படு பயங்கர கோழையாக தானே இருத்தல் ஆகக்கூடும்..
ஆதலில் முஷ்டி உயர்த்தி மேடையில் வீர முழக்கமிட்டு பொய் புரட்டுகளை பரப்பி வரும் பூச்சாண்டிகளிடம் இருந்து விலகிக் கொள் தம்பி..
காரணம் அவர்கள் நிஜத்தில் “அண்ணா உங்கள் ஆதரவுவேண்டும்” என கதறி அழுபவர்கள் என்பதை புரிந்துகொள் தம்பி..
இனியாவது விழித்துக்கொள் தம்பி..
இனியாவது விவேகத்துடன் நடந்து கொள் தம்பி… 🐝
தொடரும்..
என் ஜன்னல் வழியே இலங்கை | #சவெரா | #இலங்கை | #தமிழ்நாடு